ஏகாந்தம்:-
இறப்பற்று இருக்கிறேன் என எண்ணியதும், என்னுள்ளிருந்தே கிளர்ந்து மலையென உயரத் தொடங்கினேன்.... இயங்க வேண்டும் என தோன்றியதும் உடலைப் பிளந்து நன்னீரில் குதித்து தங்க மீனென நீந்தி செல்கிறேன்.... பசியெடுத்ததும், சுழித்து ஓடும் நதியின் முகவாயில் எகிறித் துள்ளும் மீன்களை கவ்வி பறந்து சென்று மலை மீதமர்ந்து உண்கிறேன்.... உறக்கம் வந்ததும், நட்சத்திர கம்பளத்தை போர்த்தியவாறு, யாதொரு சிந்தனையுமற்று இரவென விரிந்து கிடக்கிறேன்... ---------Jinovy