நித்தியம் :-
அவன், இறப்பிற்கென காத்திருக்கிறான்.. சூழ்ந்துள்ளோரின் பிரார்த்தனை முணுமுணுப்புகள் அவனது செவிகளை குறுகுறுக்கச் செய்கின்றன.. வெடிப்புற்ற உதடுகளின் மேல் தோய்ந்திருப்பது ஏளனமா? புன்னகையா? எதுவென்று சரியாக கணிக்க இயலவில்லை.... கற்பனையில் அவன், ஒற்றை ஆளாய் மேடையில் "ராக்" இசைத்துக் கொண்டிருக்கிறான்.. வான் நோக்கி உமிழப்பட்ட நெருப்புப் பொறிகள் அவனது கண்கள் இழந்திருந்த சோபைக்கு புத்துயிர் அளிக்கின்றன.... இதயம் துடிப்பது கேட்கும் அபூர்வ தனிமைக்குள் ஆழ்ந்திருக்கும் மற்றொரு வேளையில், ஈரமான இருதய சுவர்களின் வெதுவெதுப்பை உள்ளங்கையினால் தடவி உணர்கிறான்.. அது தாயின் கருவறையை ஒத்திருப்பதாய் தோன்றுகிறது.... மூர்க்கமாகித் திரிந்த நாட்களில் அவன் உடைத்த மனங்களுக்காக இறுதிமுறையாக மன்னிப்பு கோருகிறான்.. இரு பக்கங்களிலும் கண்ணீர் வழிந்தோட உள்ளம் இலகுவாகி மிதக்கின்றது.... இன்னும் என்ன மிச்சமிருக்கிறது?.. எண்ணங்களற்ற ...