Posts

Showing posts from October, 2025

அசுவாரசியமான மனிதர் :-

அசுவாரசியமான மனிதர்:- கூடடைந்த பறவைகளின்  உரத்தக் குரல்கள் அந்த மனிதனை, அண்ணார்ந்து அருகேயிருந்த மரத்தை   பார்க்கச் செய்தன.. அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு  அவர் வந்திருப்பது இதுவே முதல் முறை.. "அவை ஒன்றையொன்று விசாரித்துக் கொண்டிருக்கக் கூடும்"  என நினைத்தார்.. இருந்தாலும் கீழேயிருந்து  பார்ப்பதற்கு காற்றில் அசைந்தாடும் ஒவ்வொரு இலையும் தமக்கு தாமே பேசிக் கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது.. புன்னகையுடன் சுற்றியுள்ள  சக பயணிகளை நோக்கினார்.. யாரும் அந்நிகழ்வில் துளி கூட  ஈடுபாடு காட்டாதது  மட்டுமல்ல, அம்மரத்தின் அருகில் கூட நிற்காததைக் கண்டு வெகுவாக அசூசையடைந்தார்.. "அசுவாரசியமான மனிதர்கள்" என தன்னுள்ளே முனுமுனுக்கையில், சொத்தென ஒரு எச்சம் அவரது நீல சட்டையில் விழுந்து தெறித்து படறியது.. "ச்சி" என்றபடியே தனது கைக்குட்டையை எடுத்து  "விருப்" என அதனை வழித்துவிட்டு, அவஸ்தையோடு தனது சட்டையைப் பார்த்து பின்னர் அண்ணார்ந்து, அந்த மரத்தை  எரித்து விடுவதைப்போல முறைத்தார்.. மேலும் ஒரு எச்சம் அவர் கண்முன்னேயே ஒரு வெடிகுண்டைப் போல  மேலி...

போகுமிடம்:-

ஊர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால், ஓடினால் மட்டுமே  கெடுவுக்குள் தாண்ட இயலும் குறிக்கப்பட்ட தொலைவை.... அதற்குப் பின்னும், பறந்து கடக்க வேண்டிய எல்லையொன்று காத்திருக்கிறது.... இப்போதைக்கு, மூச்சிரைத்த படி ஊர்ந்து கொண்டிருக்கிறேன், ஓடுவதற்கான தருணத்தைக் கணக்கிட்டபடி.... இடையிடையே சிறகினை பெற வேண்டியும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.... --------------- Jinovy

மதியப் படம்:-

அடர்ந்து நிறைந்திருக்கிறது வெய்யில் சோம்பலுடன் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது நிழல் வெய்யிலுக்குத் தீனியாய் நிழலுக்கு பாரமாய் உமிழ் நீர் ஒழுக அலைகிறது நாய் நமட்டுச் சிரிப்புடன் பட்டும் படாமலும் கடந்து போகிறது தென்றல் ---------- Jinovy

விழிப்பு:-

விழிப்பு:- வானோடு சேர்த்து என்னையும் பிரதிபலிக்கின்றது குளம்... எனக்கும் வானுக்கும் எட்டாத் தொலைவு என்பதை குளம் அறிவதற்கில்லை... அதைச் சொல்ல வேண்டிய  நானோ, இன்னமும் பிரதிபலிப்பில்  மயங்கிக் கிடக்கின்றேன்... எங்கிருந்தோ திடுமென, குளத்தினுள் குதித்த  தவளையொன்று வானைக் கலைத்து, என்னையும் குளத்தையும் ஒருசேர எழுப்பிவிட்டது... அதன் பின்னர், எனக்கோ குளத்திற்கோ வானுக்கோ தவளைக்கோ யாதொரு சம்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை.... ----------- Jinovy