Posts

Showing posts from May, 2021

காமம் :-

அணைக்கப்படாத காமம் என்ன செய்யும்?.. நெட்டி முறிக்கும்? இம்சிக்கும்? மிருகமாக்கும்? கழிவறையில் பூட்டிக் கொள்ளச் செய்யும்? ..... சமூக வலைதளங்களில் பாலியல் வறட்சியைப் பற்றி பத்தி பத்தியாய் எழுதுவோரை நினைத்துச்  சிரித்திருக்கிறேன்.... அவற்றைப் படிக்கையில், கடலைப் பற்றி கனவு கண்ட படி கண்ணாடி தொட்டிக்குள்  வளைய வரும் மீனைப் போன்றோ.. வறட்டு வெயிலில் காயும் கிழிசலான உள்ளாடை இதமான தென்றலில் படபடப்பது போன்றோ, காட்சிகள் மனக்கண்ணில் தோன்றி மறையும்.... "காமத்தை அன்பாக மாற்றி விடு " ஒரு பேட்டியில் ஓஷோ கூறியிருந்தார்.. அவரால் மாற்ற முடிந்ததா? முடிந்திருந்தால் மாட்டியிருக்க மாட்டாரோ? இருபதுகளில் இவ்வகையான எண்ணங்கள் என்னைக் குத்தியதுண்டு.... காமம்.. அமிழ்தாகவும், விடமாகவும், மருந்தாகவும், யோகமாகவும், இன்ன பிற வகை வகைகளாகவும், பயன்படுத்தப்படலாம் என சான்றோரால் விளக்கக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. காமத்தின் தேவை தமக்கு எவ்வகையானது என்பதை எளிய மனிதன் யோசிக்கக் கூடுமா?!.... காமம் என்பது தான் என்ன?.. பிரபஞ்சம் சொட்டிய இறைமையை புவி தன்னுள் ஏந்திக் கொண்டதும் முகிழ்க்கத் துவங்கிய இயற்கையின் ஆதி உணர்வு.....

கொலைக்கருவி :-

அலுவலகத்தில் அவனை  "சாமியார்" என்றே  எல்லோரும் அழைத்தோம்.. "இளிச்சவாயன்", "பிள்ளைப்பூச்சி"  என மேலும் இரண்டொரு  கேலிப் பெயர்களும்  புழக்கத்தில் இருந்தன.... யாரிடமும் அவன்  கோபித்ததோ கடிந்ததோ  நான் கண்டதில்லை.. படீரென பேசுவோரிடம்  கூட, அவரது இமையினும்  மென்மையான குரலில்  நவிலும் சுபாவி.... சம்பாத்தியத்தில் தனது  சேமிப்பும் செலவும்  போக, ஏனையவற்றை ஆதரவற்றோருக்கென தந்துவிடுவான்.. என்னையும் உதவுமாறு  உற்சாகப் படுத்துவான்.. வசதியற்ற பிள்ளைகளின்  மருத்துவ செலவிற்கு  வெகுவாக முக்கியத்துவம்  அளித்தான்....  சமீபகாலமாக அவனுக்கு  அவ்வப்போது  கடும் ஜுரம்  கண்டு செல்வது  வாடிக்கையாகி விட்டிருந்தது.. அவனது உடல் எடையும்  வெகுவாக  குறையத் தொடங்கியிருந்தது.. கேன்சரோ எலும்புருக்கியோ  என குழாமில்  யாவரும் கவலையோடு கிசுகிசுத்துக் கொண்டார்கள்.... முப்பது வயதே  நிரம்பிய இளைஞன்.. வெளித்தோற்றத்திற்கு  சகஜமாகப் பழகினானெனினும், யாரிடமும் ஒரு வரைமுறை  வைத்தே பேசுபவன்.. அதன் ப...