Posts

Showing posts from July, 2025

சூதாடியின் வரம்:-

கணத்திற்குக் கணம்  கையை மீறி  நகர்ந்து கொண்டிருக்கிறது  எனது வாழ்க்கை.... நான் ஒரு சூதாடி.. நீங்கள் பந்தய  விடுதிகளுக்கு செல்வோரேயானால், ஏதேனும் ஒன்றில்  என்னை நிச்சயம்  பார்த்திருக்கக் கூடும்.... அதிர்ஷ்டத்தை நம்பி  சூதாட வருவோர்க்கு,  அது சூதின் இன்ன பிற நுட்பங்களோடு நுணுக்கமாக பின்னப்பட்டது என்பது பெரும்பாலும் தெரியாது.... அதிர்ஷ்டக்காரன் என முத்திரையிடப்பட்டுள்ளேன் என்பதால், பழக்கப்பட்ட நண்பர்கள் தங்கள் பணத்திற்காக விளையாட என்னையே அழைப்பர்.... எனது கோரிக்கை ஒன்றும் பெரிதல்ல.. விளையாட்டிற்கென  ஒரு கட்டணம் ஜெயிப்பதில் கால்பங்கு.... புதிதாக வருவோர்க்கு சூதின் வாகு புரியாது.. அவர்களில் பெரும்பாலோனார் முதல் சுற்றிலேயே எதிரிலிருப்போரை முற்றாக துடைத்துவிட வேண்டும் என துடிப்பர்.... ஆனால், ஒரு திறமையான சூதாடி, தான் பந்தயத்தில் இருப்பதே அடுத்தவர் உணராத வண்ணம் அமந்திருப்பான்.. புலனாகாத மனிதனைப் போல.... அவனது குறிக்கோள் முதல் சுற்றோ,  இரண்டாவதோ, மூன்றாவதோ கிடையாது.. எந்த சுற்றில் தோற்றவரின் மூரக்கமும் ஜெயித்தவரின் ஆணவமும் உச்சகட்டமாக மோதுமோ அந்த...

இறுதிக் கடிதம்:-

நடுக்கத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.. எனது இறுதியே இறுதியான வார்த்தைகளை.... உள்ளங்கையுள்ளிருந்து கசிந்து வரும் வியர்வைத் துளிகள் அடுத்த வரிக்கான தாளின் பகுதியை ஈரப்படுத்தியிருக்கின்றன.... இதே வேகத்தோடு அடுத்த வரி சென்றால், ஈரத்தில் ஊறிப்போயிருக்கும் தாள் கிழிந்துவிடலாம் அல்லது பிசுபிசுத்து பரவப் போகும் பேனா மையால் எழுத்துக்கள் மங்கிவிடலாம்.... கிழியாது எழுதினாலும், பின்னர் இக்கடிதம் கிடைக்கப் பெறுவோர் அம்மங்கலான எழுத்துக்களைப் புரிந்துகொள்ள திணறுகையில் நான் கடத்த விழைந்த உணர்வு மட்டுப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் உண்டாகவே செய்கிறது.... ஈரமான பகுதியை விடுத்து அதற்கடுத்த பகுதியில் எழுதுகையில் வரிகளுக்கான இவ்விடைவெளி எதற்கோ நேர்ந்துவிட்டத்தைப் போல தோன்றிவிடுமோ என்கிற குழப்பமும் வராமலில்லை.... தற்கொலை செய்து கொள்வதை விடவும் இது பெரும் வாதையாய் மாறிக் கொண்டிருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.... எதுவும் வேண்டாமென புதுத் தாளெடுத்து எழுத ஆரம்பிக்கின்றேன்.... ஆனால் முன்பிருந்த  தற்கொலை முனைப்பின்  வீரியம் எழுத்தாய் மாற ஏனோ திணறுகிறது.... "அது ஏன்?" என வலிந்து யோசிக்கையில், பேனாவைப் பிடித...

பிரவாகம்:-

ஒவ்வொன்றாக கூழாங்கற்களை உடைத்து, அதனுள் தேங்கிக்கிடந்திருந்த நதியைப்  பருகிக் கொண்டிருந்தேன்.... நிழலுக்கென வந்தவர்களுக்கு நதியின் குளுமையை ஸ்பரிசிக்க  இரண்டொரு கற்களை உடைத்தும் கொடுத்தாயிற்று.... என்னை இளப்பமாகப்  பார்த்துத்  தங்களுக்குள் சிரித்துப் பேசியபடி அப்பால் நகர்ந்தனர்....  தாகம் தணிந்ததும் நான் பொங்கி பிரவகித்து  நதியாக கரைகளில்  பாய்ந்தோடத் துவங்கினேன்.... சற்றுத் தொலைவில்,  அவர்கள் நடந்து செல்கையில்  கூழாங்கற்களென மாறி கரையோரங்களில் விழுந்து கொண்டிருந்தனர்.... -------------------Jinovy

சல்லித்தனம் :-

வெகு நேரமாய்  பயணித்ததில்  மிகவும் களைத்துப்  போயிருந்தோம்😓😓....  தூரத்தில் சலசலக்கும்  நீரோடையினை நோக்கி  எனது குதிரை,  வாயில் நுரை தள்ள விசுவிசுத்து  நடை போட்டது.... சற்றுமுன் இவ்வடர்  வனத்தினுள் நிகழ்ந்த  எதிரியின் சுற்றிவளைப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிச் சிதறியவருள்  நானும் ஒருவன்🙁....  யுத்த தந்திரத்தில்  பின்வாங்குதல் சிறந்த  யுக்தியெனினும்,  வீரனென்னும் இறுமாப்பு  என்னை விரக்தியடையச்  செய்திருந்தது😖....  நீரோடையை அடைந்ததும்  குதிரையை  அதன் போக்கில்  விடுவித்துவிட்டேன்..  அது தனது  தாகத்தை தணித்துக்  கொண்டது..  அற்பப் பிறவி,  வயிற்றுப் பாட்டிற்கென  இங்கேயும் அங்கேயும்  மேய்ந்தபடி  திரிந்து  கொண்டிருந்தது....  பொதிபொதியான எண்ணங்கள் பசியையும் தாகத்தையும்  மீறி  என்னை மூச்சடைக்க  செய்யத் துவங்கின..  தப்பிக்கையில்  எனது உடைவாளைத்  தவற விட்டிருந்தது  அவமானத்திலும் அவமானம்😩....  ஏனைய யாவ...

இயற்கையும் இசையும் இளம்பெண்களும் :-

மஞ்சள் பாரித்த  ஓர் அந்தி வேளையில்  தலைவாரியபடி கதைத்துக்கொண்டிருக்கும் இளம்பெண்களை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.... கபடமில்லாத காமமும் மூர்க்கமில்லாத காதலும் காயப்படுத்தாத கேலிகளும் கட்டுக்குள் இல்லாத சிரிப்பொலிகளும் அவர்களது கதையாடல்களினூடே  தளும்பியும் வழிந்தும் வெளிப்பட்டன.... முன்பின் பார்த்திராத  அந்நியனொருவன் தங்களை அவதானிக்கும் எச்சரிக்கை உணர்வினூடே, அவர்களையும் அறியாது  அவ்வப்போது ஓரிரு  வசீகர பார்வைகளை  ஒவ்வொருத்தியும் என் மீது எய்து திரும்பினாள்.... போதையற்று தனித்திருக்கும் அரிதான இம்மாலையில் அவர்களுடனான இந்த முரணானதொரு பிணைப்பு,  மகரந்தத்தை முகர்ந்து முயங்கும் வண்டினை போல்  என்னையும் மயக்கத்தில் கிடத்தியது.... இருள் பற்றத்தொடங்கியதும்  ஒவ்வொருத்தியும் விறுவிறுவென குழுவிலிருந்து விடைபெற்று  தத்தமது இல்லம் நோக்கி விரையத் தொடங்கினர்.. அவர்களது அவசரத்திலும் விடைபெற்றலிலும்  நான் ஒரு  கருதுபொருளாகக் கூட  இருக்கவில்லை போலும்.... அடர்த்தியான இயற்கையின் மத்தியில் அமர்ந்து  அமைதியை ரசிக்க வந்தவன், அதன் சாயல் ப...

துரோகி:-

தொடக்கத்தில் அவர்கள்  காதலித்ததுப் பற்றி  எதுவும் தெரியாது.. ஒரே ஒரு முறை  அவளை என்னிடம்  அறிமுகப்படுத்தியிருந்தான்....  மலர்க் காம்பினை  பிசிராமல் கிள்ளி  எடுக்கும் லாவகம்  நிறைந்த பேச்சு  அவளிடம்..  கவிதைகள் என்றால்  கொள்ளைப் பிரியம்  என்பது  கூடுதல் தகவல்.... ஒருநாள்,  அவளைக் காதலிப்பதாய்  என்னிடம் சொல்லிக்  குழைந்தான்.. அவளுக்கென அடிக்கொரு முறை  கவிதைகளை இரவல்  வாங்கிச் செல்வான்.... அவனது பெயரிட்டு  எழுதித் தந்திருந்தாலும்,  உணர்வுகள் என்னுள்ளிருந்தே  வெளிப்பட்டன..  ஏனெனில்,  அவள் எப்போதும்  என்னுள்ளே பொதிந்திருந்தாள்....  அத்தருணங்களில் மட்டும்  என்னுள்ளிருந்த மொழிச் செறிவிலிருந்து வார்த்தைகளை பக்குவமாக  வெட்டி எடுத்து,  கவிதைகள் தம்மைத்தாமே  அழகுறச் செதுக்கிக்  கொண்டன....  பிறிதொரு நாள்  அவளும் அவனைக்  காதலிப்பதாய் அவன் குதூகலித்து  சொன்னபோது,  அவள் மீதான  மிதமிஞ்சிய ஈர்ப்பு  என்னை அவளிடம்  வெள...

பாரம் :-

செவிகளை அடைக்கச்  செய்யும் ஆரவாரத்துடன்  பெருமழையொன்று  கொட்டிக் கொண்டிருந்தது....  கண்களை நிறைக்கும்  குளிர்ச்சியை சிலிர்ப்புடன்  அனுபவித்தபடி  மழையினூடே தெரியும் மங்கலான காட்சிகளினுள்  மனதை செலுத்திக்  கொண்டிருந்தேன்.... 'விர்'ரென மழையின்  திரையை கிழித்தவாறு  பறந்து வந்த  ஒரு காகம்  என்னருகேயிருந்த கொடிக்கம்பத்தின்  மீது 'படக்'கென  அமர்ந்து கொண்டது....  அமர்ந்த கணம் தொட்டு  ஓயாமல் கரைந்து  மழையைப் பற்றி  என்னிடம் குறைபட்டுக்  கொண்டது. கூட்டை பற்றிய  கவலையும் அதன்  தொனியில் தெரிந்தது.... மழையின் வேகம்  சற்றே குறைந்ததும்  'விருட்'டென உந்தி  மீண்டும் 'விர்'ரென  பறந்து,  நொடிப் பொழுதில்  என் பார்வையினின்று  விலகி மறைந்தது.... மறுநாள்,  மழையில் சரிந்த  மரங்களை காண்கையில்  மெல்ல மெல்ல  அக்காகத்தின் சோகம்  என் மீதும்  அப்பிக் கொண்டது.. கூடவே,  சரிந்து கிடக்கும்  மரங்களின்  பெரும் பாரமும்  அசையவிடாமல்...

சங்கிலித் தொடர்:-

பொழிந்த வண்ணம் இரவை நிறைக்கிறது குளிர். எதிர்வினையாக உள்ளிருந்து வெப்பம் கிளர்த்துகிறது உடல். சலியாது எண்ணங்களை சவைத்து தள்ளுகிறது மனம். கேட்காமல் உட்சென்று சொல்லாமல் வெளியேறுகிறது சுவாசம். இயன்ற வரை இருளை விரட்டுகிறது தீபம். ஓயாது, ஒழியாது இரைந்தபடி பாய்கிறது வெள்ளம். அனைத்திற்கும் இடமளித்து விரிந்து கிடக்கிறது நிலம். யாவற்றையும் பார்த்தபடி இரவாய் உறைந்திருக்கிறது ஆகாயம். -------- Jinovy