பிரவாகம்:-
ஒவ்வொன்றாக கூழாங்கற்களை
உடைத்து, அதனுள்
தேங்கிக்கிடந்திருந்த நதியைப்
பருகிக் கொண்டிருந்தேன்....
நிழலுக்கென வந்தவர்களுக்கு
நதியின் குளுமையை
ஸ்பரிசிக்க
இரண்டொரு கற்களை
உடைத்தும் கொடுத்தாயிற்று....
என்னை இளப்பமாகப்
பார்த்துத்
தங்களுக்குள் சிரித்துப்
பேசியபடி அப்பால்
நகர்ந்தனர்....
தாகம் தணிந்ததும்
நான் பொங்கி
பிரவகித்து
நதியாக கரைகளில்
பாய்ந்தோடத் துவங்கினேன்....
சற்றுத் தொலைவில்,
அவர்கள்
நடந்து செல்கையில்
கூழாங்கற்களென மாறி
கரையோரங்களில்
விழுந்து கொண்டிருந்தனர்....
-------------------Jinovy
Comments
Post a Comment