யானை:-
இப்பூங்காவிற்கு அடிக்கடி நான் வருகை தர ஒரே காரணம், இதன் மையத்தில் எழுப்பப்பட்டிருக்கும் பளிங்கால் ஆன யானை சிலை.... அச்சிலையின் அடியில் தேங்கியிருக்கும் நிழலுக்கு ஒதுங்கியவாறு அதன் பானை வயிற்றை அணைத்தபடி நிற்கக் கிடைப்பது ஒருவகையான தவம்.... "பளிங்கு யானை!!" யோசித்ததும் சிரித்துக் கொள்வேன்.. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அதனை அணுகிப்பார்ப்பேன்.. நிஜ யானையைப் போன்று கதகதப்பாய் இல்லாவிடினும், சிலை தரும் 'யானையின்' உருவ பிரமிப்பு !! என்னுள் என்றென்றும் அழியாதிருக்கிறது.... சிறுவயதில், தெருவில் யானை வரக் கண்டதும் நண்பர்கள் நாங்கள் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டே அதன் பருத்த ஆகிருதியை அதிசயித்துப் பார்த்தபடி கோவில் வரை பின்தொடர்ந்து செல்வது பொதுவான அனுபவம்.... யானை உண்ணும் ஒவ்வொரு பண்டமும் அதன் கடைவாயினுள் உடைந்து நொறுங்குகையில் எழும்பும் ஒலி, துதிக்கை உட்பட அதன் உடலசைவு, ப...