சங்கிலித் தொடர்:-

பொழிந்த வண்ணம்
இரவை நிறைக்கிறது
குளிர்.

எதிர்வினையாக உள்ளிருந்து
வெப்பம் கிளர்த்துகிறது
உடல்.

சலியாது எண்ணங்களை
சவைத்து தள்ளுகிறது
மனம்.

கேட்காமல் உட்சென்று
சொல்லாமல் வெளியேறுகிறது
சுவாசம்.

இயன்ற வரை
இருளை விரட்டுகிறது
தீபம்.

ஓயாது, ஒழியாது
இரைந்தபடி பாய்கிறது
வெள்ளம்.

அனைத்திற்கும் இடமளித்து
விரிந்து கிடக்கிறது
நிலம்.

யாவற்றையும் பார்த்தபடி
இரவாய் உறைந்திருக்கிறது
ஆகாயம்.

-------- Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-