Posts

Showing posts from May, 2026

வியாபகம் :-

இந்த உலகம் எப்போதும் இப்படித்தான் விடியும்  இருளும் பருவங்கள் சுழற்சி முறையில் வந்து போகும் இத்தனை வருடங்களாய் இதற்குத்தான் பழக்கப்பட்டிருந்தேன் திடீரென்று இப்போது ஒரு புது உலகமென என் முன்னே நீ தோன்றி யாவற்றிலும் வியாபிக்கின்றாய் உனது உலகத்தின்  ஒற்றைப் பிரஜையாய் இனி நான் என்ன செய்ய? மீண்டும் ஆதியிலிருந்து  தொடங்குவோம் வா! இம்முறை விலா எலும்பு வேண்டாம்; எனது இதயத்திலிருந்து உன்னைத் தருவித்துக் கொடு ------ Jinovy

சில

கூண்டிலடைப்பட்ட பறவைகளும் தன்னைச் சேர வேண்டி, இறப்பற்றிருக்கிறது ஆகாயம்.... ---------------------------------- வானுக்கு இடம்  கொடுத்து  தாழப் பறக்கிறது  ஒரு பறவை.... _-----_------_-------_---- அடைப்பட்ட ஒவ்வொரு பறவையும் கூண்டிலிருந்து ஆகாயத்துக்குச் செல்லும் பாதையைப் பார்த்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இறக்கைகள் பாரமாயிருப்பினும் எந்தப் பறவையும் அவற்றை இழக்கத் துணிவதில்லை. ஊஞ்சல்களையும், கிளை விரித்த மரத் தண்டுகளையும் விட — சிறிதே சிறிதளவு ஆகாயத்தைக் வேண்டியே போவோர் வருவோரிடமெல்லாம் ஒவ்வொரு முறையும் கீச்சிடுகின்றன. அவற்றுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியவில்லை. ஆனால் — கடவுளுக்கு அவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு: தமக்கிடப்பட்ட வாழ்வை எந்த விசனமுமின்றி வாழ்ந்து கழித்துவிடும் என்று  -----_-------_-------_------- பருவம் கடக்கும் முன்னரே பறவைகள் இடம்பெயர்ந்து விட்டன… மீதமுள்ள பருவத்தை வெற்றுக் கூடுகள் சுமந்து கொண்டிருக்கின்றன… ----_------_-------_--------- The moment  i taste the sea in the fish, i become the universe.... ------------------------ Afte...