வியாபகம் :-
இந்த உலகம்
எப்போதும் இப்படித்தான்
விடியும்
இருளும்
பருவங்கள் சுழற்சி முறையில்
வந்து போகும்
இத்தனை வருடங்களாய்
இதற்குத்தான் பழக்கப்பட்டிருந்தேன்
திடீரென்று இப்போது
ஒரு புது உலகமென
என் முன்னே
நீ தோன்றி
யாவற்றிலும் வியாபிக்கின்றாய்
உனது உலகத்தின்
ஒற்றைப் பிரஜையாய்
இனி நான் என்ன செய்ய?
மீண்டும் ஆதியிலிருந்து
தொடங்குவோம் வா!
இம்முறை
விலா எலும்பு வேண்டாம்;
எனது இதயத்திலிருந்து
உன்னைத் தருவித்துக் கொடு
------ Jinovy
Comments
Post a Comment