விழிப்பு:-

விழிப்பு:-

வானோடு சேர்த்து
என்னையும் பிரதிபலிக்கின்றது
குளம்...

எனக்கும் வானுக்கும்
எட்டாத் தொலைவு
என்பதை
குளம் அறிவதற்கில்லை...

அதைச் சொல்ல வேண்டிய 
நானோ,
இன்னமும் பிரதிபலிப்பில் 
மயங்கிக் கிடக்கின்றேன்...

எங்கிருந்தோ திடுமென,
குளத்தினுள் குதித்த 
தவளையொன்று
வானைக் கலைத்து,
என்னையும் குளத்தையும்
ஒருசேர
எழுப்பிவிட்டது...

அதன் பின்னர்,
எனக்கோ குளத்திற்கோ
வானுக்கோ
தவளைக்கோ
யாதொரு சம்பந்தமும்
இருப்பதாகத் தோன்றவில்லை....

----------- Jinovy

Comments