போகுமிடம்:-

ஊர்ந்து செல்ல மட்டுமே
அனுமதிக்கப்பட்டிருக்கிறது..
ஆனால்,
ஓடினால் மட்டுமே 
கெடுவுக்குள் தாண்ட இயலும்
குறிக்கப்பட்ட தொலைவை....

அதற்குப் பின்னும்,
பறந்து கடக்க வேண்டிய
எல்லையொன்று காத்திருக்கிறது....

இப்போதைக்கு,
மூச்சிரைத்த படி
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்,
ஓடுவதற்கான தருணத்தைக்
கணக்கிட்டபடி....

இடையிடையே
சிறகினை
பெற வேண்டியும்
பிரார்த்தித்துக் கொள்கிறேன்....

--------------- Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-