விழிப்பு:- வானோடு சேர்த்து என்னையும் பிரதிபலிக்கின்றது குளம்... எனக்கும் வானுக்கும் எட்டாத் தொலைவு என்பதை குளம் அறிவதற்கில்லை... அதைச் சொல்ல வேண்டிய நானோ, இன்னமும் பிரதிபலிப்பில் மயங்கிக் கிடக்கின்றேன்... எங்கிருந்தோ திடுமென, குளத்தினுள் குதித்த தவளையொன்று வானைக் கலைத்து, என்னையும் குளத்தையும் ஒருசேர எழுப்பிவிட்டது... அதன் பின்னர், எனக்கோ குளத்திற்கோ வானுக்கோ தவளைக்கோ யாதொரு சம்பந்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை.... ----------- Jinovy
அசுவாரசியமான மனிதர்:- கூடடைந்த பறவைகளின் உரத்தக் குரல்கள் அந்த மனிதனை, அண்ணார்ந்து அருகேயிருந்த மரத்தை பார்க்கச் செய்தன.. அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு அவர் வந்திருப்பது இதுவே முதல் முறை.. "அவை ஒன்றையொன்று விசாரித்துக் கொண்டிருக்கக் கூடும்" என நினைத்தார்.. இருந்தாலும் கீழேயிருந்து பார்ப்பதற்கு காற்றில் அசைந்தாடும் ஒவ்வொரு இலையும் தமக்கு தாமே பேசிக் கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது.. புன்னகையுடன் சுற்றியுள்ள சக பயணிகளை நோக்கினார்.. யாரும் அந்நிகழ்வில் துளி கூட ஈடுபாடு காட்டாதது மட்டுமல்ல, அம்மரத்தின் அருகில் கூட நிற்காததைக் கண்டு வெகுவாக அசூசையடைந்தார்.. "அசுவாரசியமான மனிதர்கள்" என தன்னுள்ளே முனுமுனுக்கையில், சொத்தென ஒரு எச்சம் அவரது நீல சட்டையில் விழுந்து தெறித்து படறியது.. "ச்சி" என்றபடியே தனது கைக்குட்டையை எடுத்து "விருப்" என அதனை வழித்துவிட்டு, அவஸ்தையோடு தனது சட்டையைப் பார்த்து பின்னர் அண்ணார்ந்து, அந்த மரத்தை எரித்து விடுவதைப்போல முறைத்தார்.. மேலும் ஒரு எச்சம் அவர் கண்முன்னேயே ஒரு வெடிகுண்டைப் போல மேலி...
நடுக்கத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.. எனது இறுதியே இறுதியான வார்த்தைகளை.... உள்ளங்கையுள்ளிருந்து கசிந்து வரும் வியர்வைத் துளிகள் அடுத்த வரிக்கான தாளின் பகுதியை ஈரப்படுத்தியிருக்கின்றன.... இதே வேகத்தோடு அடுத்த வரி சென்றால், ஈரத்தில் ஊறிப்போயிருக்கும் தாள் கிழிந்துவிடலாம் அல்லது பிசுபிசுத்து பரவப் போகும் பேனா மையால் எழுத்துக்கள் மங்கிவிடலாம்.... கிழியாது எழுதினாலும், பின்னர் இக்கடிதம் கிடைக்கப் பெறுவோர் அம்மங்கலான எழுத்துக்களைப் புரிந்துகொள்ள திணறுகையில் நான் கடத்த விழைந்த உணர்வு மட்டுப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் உண்டாகவே செய்கிறது.... ஈரமான பகுதியை விடுத்து அதற்கடுத்த பகுதியில் எழுதுகையில் வரிகளுக்கான இவ்விடைவெளி எதற்கோ நேர்ந்துவிட்டத்தைப் போல தோன்றிவிடுமோ என்கிற குழப்பமும் வராமலில்லை.... தற்கொலை செய்து கொள்வதை விடவும் இது பெரும் வாதையாய் மாறிக் கொண்டிருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.... எதுவும் வேண்டாமென புதுத் தாளெடுத்து எழுத ஆரம்பிக்கின்றேன்.... ஆனால் முன்பிருந்த தற்கொலை முனைப்பின் வீரியம் எழுத்தாய் மாற ஏனோ திணறுகிறது.... "அது ஏன்?" என வலிந்து யோசிக்கையில், பேனாவைப் பிடித...
Comments
Post a Comment