அசுவாரசியமான மனிதர் :-

அசுவாரசியமான மனிதர்:-

கூடடைந்த பறவைகளின் 
உரத்தக் குரல்கள்
அந்த மனிதனை,
அண்ணார்ந்து
அருகேயிருந்த மரத்தை  
பார்க்கச் செய்தன..

அந்தப் பேருந்து
நிறுத்தத்திற்கு 
அவர் வந்திருப்பது
இதுவே முதல் முறை..

"அவை ஒன்றையொன்று
விசாரித்துக் கொண்டிருக்கக்
கூடும்" 
என நினைத்தார்..

இருந்தாலும் கீழேயிருந்து 
பார்ப்பதற்கு
காற்றில் அசைந்தாடும்
ஒவ்வொரு இலையும்
தமக்கு தாமே
பேசிக் கொண்டிருப்பது
போல்
அவருக்குத் தோன்றியது..

புன்னகையுடன் சுற்றியுள்ள 
சக பயணிகளை
நோக்கினார்..

யாரும் அந்நிகழ்வில்
துளி கூட 
ஈடுபாடு காட்டாதது 
மட்டுமல்ல,
அம்மரத்தின் அருகில்
கூட
நிற்காததைக் கண்டு
வெகுவாக அசூசையடைந்தார்..

"அசுவாரசியமான மனிதர்கள்"
என தன்னுள்ளே
முனுமுனுக்கையில்,
சொத்தென ஒரு எச்சம்
அவரது நீல சட்டையில்
விழுந்து தெறித்து
படறியது..

"ச்சி" என்றபடியே
தனது கைக்குட்டையை
எடுத்து 
"விருப்" என
அதனை வழித்துவிட்டு,
அவஸ்தையோடு
தனது சட்டையைப்
பார்த்து
பின்னர் அண்ணார்ந்து,
அந்த மரத்தை 
எரித்து விடுவதைப்போல
முறைத்தார்..

மேலும் ஒரு எச்சம்
அவர் கண்முன்னேயே
ஒரு வெடிகுண்டைப்
போல 
மேலிருந்து வரக் கண்டு
பீதியுடன் பக்கவாட்டில் 
ஒரு எட்டுத் தாவி 
தன்னை தற்காத்துக்
கொண்டார்..

மீண்டும் ஒருமுறை
மரத்தை கோபமாக
பார்த்து விட்டு
பின்பு அனிச்சையாக 
அவரது சூழலை
கவனிக்கையில்,
அங்குள்ள யாவரும்
அவரையேப் பார்த்துக்
கொண்டிருந்தனர்..

ஒவ்வொரு முகத்திலும்
ஒவ்வொரு வகையான 
உணர்ச்சி..

அசட்டை, ஏளனம்,
பரிதாபம், ஆறுதல்,
பீதி, கேள்விக்குறி..

அவர்களைக் கண்டதும்
சற்றேக் கூச்சமடைந்தவராய்,
தனது சட்டையையும்
கைக்குட்டையையும்
கழுவ
அருகிலிருந்த
தேநீர் கடையை
நோக்கி 
அவர் நடந்தார்..

அந்த நடையில்
ஒரு அசுவாரசியம்
தென்பட்டது ..

——————Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-