கருணைக்கரம்:-
தீயெனச் சுட்டதில்
உதறிய கரத்தினின்று
விழுந்தோடிய மந்திர
ரட்சை அறுத்த
பாவத்தின் வேர்கள் மீது
தடம் பதித்து
நடந்த யுவதியொருத்தியை
கண்டதும்
சந்நியாசம் துறந்து
மிருக உருக்கொண்டு
இளமையை வேட்டையாடிக்
களித்த மனிதனை
புறந்தள்ளியோடி எதிர்ப்பட்ட
பள்ளமொன்றில்
மீந்திருந்த கற்பைக்
கொண்டு
அக்கினி வளர்த்து
பிரவேசிக்க புகுந்தவளை
காக்க முளைத்ததாம்
கருணையின் கை.....
—---—---------- Jinovy
Comments
Post a Comment