இளஞ்சிவப்பு மயில்தோகை

மயில்தோகையின் வண்ணங்களில் 
சிக்கிக் கொள்கிறது 
அந்த சிறுமியின் கவனம்..

எல்லா காட்சிகளின் 
பின்னணியிலும் 
கருநீலமும் அடர்பச்சையும் 
குழைந்து கிடக்கின்றன.. 

இரவில் வானம் 
முழுதும் மயில்தோகைகள் 
பரப்பி கிடப்பதாய் 
தோழியிடம் விவரிக்கிறாள்.. 

புத்தகப் பை 
சிருடையின் கழுத்துப்பட்டை என 
அவள் கரம்பட்ட 
இடத்திலெல்லாம் கொத்து கொத்தாய் 
மயில்தோகை தட்டுப்படுகிறது ..

இவ்வாறு முடிவிலா 
மயில்தோகை அனுபவம் கொண்ட 
ஒரு சிறுமியின்
புனைக்கதையை எழுத எண்ணியபடி 
குறிப்பேட்டை திறந்த 
அந்த யுவனுக்கு 
காணக்கிடைக்கிறது, 
இளஞ்சிவப்பும் வெள்ளையுமாய் 
ஒரு மயில்தோகை.... 

Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-