போதையும் தெளிவும் :-
விளிம்பை நோக்கி
விரைந்து கொண்டிருக்கிறேன்,
வாழ்க்கையின் அறைகூவலுக்கு
பதிலேதுமில்லை என்னிடம்....
மீதம் இருப்பதெல்லாம்
இரு கோப்பையளவு
மது மட்டுமே!!
முதல் கோப்பை
முடிந்த பின் விளிம்பை
எட்டி விடுவேன்....
அடுத்த கோப்பையை
விளிம்பில் அமர்ந்தே
பருகலாம்....
"விடிந்ததும் போதை தெளியுமே?!"
யோசித்துக் கொண்டே
இரண்டாம் கோப்பையை
பருகினேன்....
பின்னர்,
விளிம்பை தாண்டிய
இரு அடிகளை
காற்றில் வைத்தேன் ....
------------------------- Jinovy
Comments
Post a Comment