யவனம்:-
எல்லா திசைகளிலிருந்தும்
கமழ்ந்தபடி படர்ந்து
கொண்டிருக்கிறது இருள்..
வெளிச்சமற்ற வீதிகளில்
நிழல்கள் யாவும்
செத்துக்கிடக்கின்றன..
போதையில் சரிந்தபடி
சிரித்துக் கொண்டிருக்கிறது
அல்லிக்கொடி
அதை செங்குத்தாக
தாங்கியவாறு
தியானித்துக் கொண்டிருக்கிறது
மரக் கம்பம்..
இரவின் யவனத்தை
தம் மீது அச்சேற்றிக் கொண்ட
கார்பன் காகிதங்கள்
விடியலுக்குள்
நுழையத் துவங்கியிருந்தன..
----- Jinovy
Comments
Post a Comment