உணர்விழக்கும் ஐம்பூதங்கள் :-

யாரோ ஒருவர்
தாகத்தின் பெயரால் 
ததும்பிக் கொண்டிருக்கிறது 
மண்குடுவை நீர்..
மழை நனைத்தபின்
மண்குடுவை
உள்ளும் புறமும்
ஈரமாய்,
புலனாகா துவாரங்களின்
ஊடறுத்து
தம்மைத்  தாமே 
நனைத்துக்கொள்ளும்
நீர்த்துளிகள்....

வெற்றுநிலம் கிடைப்பிணமாய்
புதை குழி தோண்டி
ஆழ்ந்துவிட்ட 
கடந்தகால நினைவுகளின்
மட்கிய கரித்துண்டுகள்
வைரங்களை தம்முள்
ஒளிவிர்த்தபடி,
மேலுக்கு எளிதில்
உடையும் திடப்பொருளாய்....

சூனியம் என்போர்
அயனிகள் என்போர்
பரந்தவெளி உணர் மண்டலம்,
எண்ணங்களை உடைத்து
நுணுக்கி பொடியாக்கி
கறைபடியாமல் காலத்தினூடே
கடத்தி செல்லும்
சொல்லாமல்விட்ட 
சொற்கள், சாபங்கள் 
மற்றும் இன்ன பிற ....

சுவாசித்த புனிதம்
உட்சென்று அங்கம்
தொடுகையில் கிளர்ந்தெழும்
வெப்பம் 
கடைக்கோடி நரம்புகளை 
மீட்டி
பக்கவிளைவுகளாய் உணர்வுகளை
உமிழும் சுரப்பிகளின் 
உட்புகுந்து இயக்கமாய்
சுழற்றி வரும்
பம்பர நிலை மீண்டெழுந்து
நொடிப்பொழுதில் வெளியேறும்
அமில எச்சம்....

புகையா வன்மம்
தொட நடுங்கி
படைகள் வழிவிடும்
சிவந்த கங்குகள்
களைப்படையாது போரிட்டு
பழுத்த இரவுகளில் 
மினுங்கி மினுங்கி
விரிந்த விழியில் 
படர்ந்த சிவப்பு
பொறிகளாய் தெறித்து
இறைவனாய் ஜனித்த
பிழம்பின் உயிர்
பொசுக்கும் தீண்டல்....
-----------Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-