வெற்றிடம்:-
இட்டு நிரப்ப முடியாத
வெற்றிடத்தில் வைக்கப்படுகிறது
ஒரு உலகம் ..
பிய்த்து எறியப்பட்ட சிறகுகளுடன்
வலம் வருகிறார்கள்
எனக்குப் பிடித்த தேவதைகள் ..
பறக்கத் தெரிந்த
குதிரைகள் யாவும்
குருடர்களிடம் ஒப்படைக்கபட்டிருகின்றன ...
மனிதர்களின் கண்களில்
முன்னொரு காலத்தில்
ஈரம் இருந்ததாய்
ஒரு வேசி கூறிக்
கேள்விப்பட்டேன் ...
யாரும் அறிந்திருக்கவில்லை போலும் ,
இருப்பினின்று சுருங்கிகொள்ள
துவங்கியிருந்தது அந்த உலகம்,
மீண்டும் ஒரு வெற்றிடமாய்...
--------------- Jinovy
Comments
Post a Comment